மணிவண்ணன் கைது – ஹரி ஆனந்த சங்கரி கண்டனம்!

மணிவண்ணன் கைது – ஹரி ஆனந்த சங்கரி கண்டனம்!

யாழ். மநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத குற்றப் பிரிவு காவல்த்துறையால் கைது செய்யப்பட்டமைக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் ஹரி ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் சமூகத்தைச் சோ்ந்த ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆா்வலர்கள் மற்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளின் தன்னிச்சையான கைதுகள் மற்றும் துன்புறுத்தல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் ஹரி ஆனந்த சங்கரி வலியுறுத்தியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள