மண்டூரில் ஆயுதக் குழுவினர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்!

மண்டூரில் ஆயுதக் குழுவினர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்!

மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது ஆயுதங்களுடன் சென்றவர்கள் தாக்குதல் குழுவினர் நேற்று நடத்தியுள்ளனர். நேற்றிரவு ஆயுதங்களுடன் சென்ற ஏழுக்கும் மேற்பட்டவர்கள் குறித்த வீட்டின் மீது தாக்குதல் நத்தியுள்ளதுடன், அங்கிருந்த இளைஞர் மற்றும் அவரின் கர்ப்பிணி மனைவி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ந்த தாக்குதல் காரணமாக காயமடைந்த இளைஞர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,மனைவி களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த குழுவினர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்,சிறிய கன்டர் வாகனம் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள