மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு!

You are currently viewing மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு!

மண்டைதீவிப் பகுதியில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இச் சோகச் சம்பவம் (21) சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5) ஆகிய இரு சிறார்களுமே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இரு சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள