மண்டைதீவில் 420 கிலோ கஞ்சா மீட்பு!

மண்டைதீவில் 420 கிலோ கஞ்சா  மீட்பு!

மண்டைதீவு கடற்பகுதியில் 420 கிலோ கஞ்சா மீட்கப்படட சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 420 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டது. மண்டைதீவு கடற்படையினர் வழமையான கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது,கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் நேற்று மாலை படகு எஞ்சின் ஒன்றையும் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் இன்று யாழ்ப்பாணம் காவல்த்துறையிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments