மண்ணை கவ்விய ராஜபக்சக்கள் , திரை மறைவில் இருப்பவர்கள் யார்.?

You are currently viewing மண்ணை கவ்விய ராஜபக்சக்கள் , திரை மறைவில் இருப்பவர்கள் யார்.?

யதார்த்தத்தை புறந்தள்ளும் அரசியல் கோட்பாடுகள் அழிந்து போகின்றன. 1948 இல் உத்தியோகபூர்வ சுதந்திரத்துக்குப் பின் பல தசாப்தங்களாக, கொழும்பில் அரசியல் வாழ்க்கையில் ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க. ஆகிய இரண்டுமே ஆதிக்கம் செலுத்தியதோடு, இவை இரண்டுமே இப்போது முக்கியத்துவமற்றதாக சீரழிந்து போயுள்ளன. 

முதலாளித்துவமானது 70 வருடங்களுக்கும் மேலாக அதன் நீண்ட அரசியல் முட்டுக்கட்டை சிதைந்த நிலையில் பாரிய அரசியல் நெருக்கடியை முகங்கொடுக்கின்றது.

திரைகளுக்குப் பின்னால், முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவின் மிகவும் சுறுசுறுப்பான வகிபாகத்துடன் தீவிர இராஜதந்திர நடவடிக்கை நடைபெற்று வருகின்றது. 

ஜே.வி.பி.யின் தலைவர்களுடனான கூட்டத்தை அடுத்து கொழும்பில் உள்ள அமெரிக்த் தாதுவர் ஜூலி சுங், ஜே.வி.பி.யைப் புகழ்ந்தமை பிரபலமானது. “சமீப காலங்களில் பொதுமக்களுடன் நிற்கின்ற வளர்ந்துவருகின்ற ஒரு குறிப்பிடத்தக்க கட்சி” என அவர் அறிவித்தார். “கடந்த காலத்தில் ஒரு தொகை வாய்ச்சவடால்கள்” இருந்ததை ஒப்புக்கொண்ட அதே வேளை, இந்தச் சந்திப்பு “உண்மையில் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் நேர்மையானதாகவும்” இருப்பதை உணர்ந்ததாக தெரிவித்த அவர், “எங்களுக்கு நல்ல புரிதல் இருப்பதாக நான் நினைக்கிறேன்” என முடித்தார். அடுத்த காட்சி, அடுத்த 20 வருடங்களுக்கு ராஜபக்சக்கள்தான் நாட்டை ஆளப்போகிறார்கள் பல அரசியல் ஆய்வாளர்களாளும் எதிர்வு கூறப்பட்ட நிலையில்   சுமார் 69 லட்சம் மக்கள் ஓட்டுக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று இவ்வளவு வேகமாக மண்ணை கவ்வியது. ஏன்..? எதற்கு..? எவ்வாறு..?  என்ற கேள்விகளை விட இந்தப் போராட்டங்களுக்கு பின்னணியில் – திரை மறைவில் இருப்பவர்கள் யார்..? 

இந்தப் போராட்டம் சுமார் மூன்று மாத காலங்களை தாண்டியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப் போராட்டங்களில் பின்னணியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்க கூடிய அந்த நிறுவனம் யாருடையது..? 

இப்படியாக பல கேள்விகள் தோன்றி மறைந்த வண்ணமே உள்ளன.

இந்தக் கேள்விகள் ஒரு மையப் புள்ளியை நோக்கி இருக்கின்றன. அவை தான் இடதுசாரிய கட்சிகள்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை தொழிலாளர் சங்கம், ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியும், முன்னணி சோசலிச கட்சி ஆகிய அமைப்புகள் இந்த போராட்டத்தில் திரை மறைவில் இருந்து செயல்படுவதை அவதானிக்க முடிகிறது. காலமும். இயற்கையும் எவரையும் விட்டு வைப்பதில்லை.

இலங்கைத்தீவில் பல ஆண்டுகள் புரையோடிப்போன பெளத்த சிங்கள பேரினவான அரசுகளும் பெளத்த பிக்குகளும் இதுவரை தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஆட்டிவைத்த நாடுகளும் செய்யவை என்ன?

என்பதற்கான அறுவடையாக தற்போதைய நிலமையினைக் உணரலாம்.

ஒரு இனத்தினை அழித்து, அம்மக்களின் பூர்வீக மண்ணை ஆக்கிரமித்து, அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து , அமைதியான,மகிழ்ச்சியான  உரிமை வாழ்வினை மறுத்து அகதிகளாக உலகமெல்லாம் தமிழினத்தை அலையவிட்ட சிங்கள அரசுகள் இந்த இழிநிலையைப் புரிந்து கொள்ளுமா?

ஈழத்தீவில் தமிழர்கள் தம்மைத்தாமே ஆளுகின்ற அரசியல் உரிமை வழங்கப்பட்டு,  சுயநிர்ணய உரிமையுடன் சுதந்திர தேசமாக வாழும் நிலை   உருவாக்கப்படாவிட்டால் இதே சூழலும் நெருக்கடிகளும் உருவாகுவதை தடுக்க முடியாது.

இந்த உண்மையை இனியாவது உணர்த்து கொள்வார்களா?

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments