மதவாளசிங்கன் குளத்தில் வலைகளில் இருந்து மீன்களை திருடும் நபர்கள் மூவர் கைது!

மதவாளசிங்கன் குளத்தில் வலைகளில் இருந்து மீன்களை திருடும் நபர்கள் மூவர் கைது!


முல்லைத்தீவு முள்ளியவளை மதவாளசிங்கன் குளத்தில் மீனவர்களால் விடப்பட்டுள்ள வலைகளை இரவு நேரங்களில் சென்று மீன்களை திருடிய கள்ளர்கள் மூவரை மீனவர்கள் மடக்கி பிடித்து முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
மதவாளசிங்களன் குளத்தினை நம்பி 38 நன்னீர் மீன்பிடி கடும்பங்கள் சங்களம் அமைத்து தொழில்செய்து வருகின்றார்கள் இன்னிலையில் அண்மை நாட்களாக இரவு நேரங்களில் குளத்தில் இறங்கி வலைளில் சிக்கியுள்ள மீன்கள் களவாடப்பட்டுள்ளமையினால் வலையில் படும் மீன்கள் குறைவாக காணப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த மீனவர்கள் 15.11.2020 அன்று இரவு குளத்தினை கண்காணித்து வந்த வேளை வலையினை எடுத்து மீனினை பிடித்த மூவரை கைதுசெய்து முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
சந்தேக நபர்களை 17.11.2020 அன்று மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது குற்றத்தினை ஒப்புக்கொண்ட குற்றவாளிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் கட்டுமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments