மத வழிபாட்டு தலத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 36பேர் பலி!

You are currently viewing மத வழிபாட்டு தலத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 36பேர் பலி!

பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் வழிபாடு நடந்துகொண்டிருந்தது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் மத வழிபாடு செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, அந்த மத வழிபாட்டு தலத்திற்குள் உடலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். இந்த சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும், 169 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில், தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது

பகிர்ந்துகொள்ள

Leave a Reply