மனிதவுரிமைகள் அருகிவரும் உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு, இந்தியா! நாட்டை விட்டு வெளியேறும் சர்வதேச மன்னிப்புச்சபை!!

மனிதவுரிமைகள் அருகிவரும் உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு, இந்தியா! நாட்டை விட்டு வெளியேறும் சர்வதேச மன்னிப்புச்சபை!!

உலகின் மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியாவிலிருந்து சர்வதேச மன்னிப்புச்சபை வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபை ( Amnesti International) யை சேர்ந்த “Sindre Stranden Tollefsen” இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்திய அரசு சர்வாதிகாரப்போக்கை நோக்கி நகர்வதால், அந்நாட்டில் தமக்கானவேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியாதிருப்பதால், இந்தியாவில் தமது செயற்பாடுகளை முடிவுக்குகொண்டு வருவதோடு, தமது உள்ளூர் பணியாட்களுக்கான வேலையிழப்பு உத்தரவுகளை வழங்கி, நாட்டைவிட்டு சர்வதேச மன்னிப்புச்சபை வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் இந்தியாவில் நிலை கொண்டிருந்த, உலகின் மிகப்பெரிய மனிதவுரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபையானது, தொடர்ச்சியாக இந்திய அதிகாரிகளால் சிறுமைப்படுத்தப்பட்டுவத்துள்ளதோடு, மன்னிப்புச்சபையின் வங்கிக்கணக்குகளும் இந்திய அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ள “Sindre Stranden Tollefsen”, மன்னிப்புச்சபையின் வங்கிக்கணக்குகளில் இருக்கும் பணம், வெள்ளையாகப்பட்ட கறுப்புப்பணம் எனக்கூறி இந்திய அதிகாரிகள் மன்னிப்புச்சபையை சிறுமைப்படுத்தி இல்லாத விடயத்தை உண்மையாக்க முயல்வதாகவும் சாடியுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச்சபையின் இந்திய வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டது பற்றி கருத்தேதும் தெரிவிக்க விரும்பாத இந்திய உள்துறை அமைச்சு, மன்னிப்புச்சபையானது விடயங்களை மிகைப்படுத்தி வெளியிட்டுள்ளதாக சாடியுள்ளதோடு, மன்னிப்புச்சபையின் நடவடிக்கைகள் இந்திய சட்டவிதிகளுக்கு முரணானதாகவும் அமைந்திருந்ததாகவும் சாடியுள்ளது.

எனினும் இதை மறுதலித்துள்ள “Sindre Stranden Tollefsen”, 2018 ஆம் ஆண்டிலும் மன்னிப்புச்சபையின் வங்கிக்கணக்குகள் இந்திய அதிகாரிகளால் முடக்கப்பட்டதாகவும், தமது வங்கிக்கணக்குகள் இந்திய அதிகாரிகளால் ஆராயப்பட்டதாகவும், மன்னிப்புச்சபை பற்றி  உண்மைக்கு புறம்பான செய்திகளை இந்திய அதிகாரிகள் ஊடகங்களில் திட்டமிட்டே பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய மாநிலங்களான “ஜம்மு – காஷ்மீர்” பகுதிகளில் இந்தியா மேற்கொண்ட மனிதவுரிமை மீறல்களை சர்வதேச மன்னிப்புச்சபை கடுமையாக கண்டித்திருந்ததாகவும், இவ்வருட ஆரம்பத்தில் தலைநகர் தில்லியில், புதிய குடிவரவு சட்டவிதிகளை எதிர்த்து பொதுமக்கள் போராட்டங்களை மேற்கொண்டிருந்த நிலையில் அவர்கள் மீது இந்திய அரசு மேற்கொண்ட வன்முறைகளையும் மன்னிப்புச்சபை கண்டித்திருந்ததாகவும், அதனை மனதில் வைத்தே மன்னிப்புச்சபை மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளாக மேற்சொன்னவை நடைபெறுவதாகவும் “Sindre Stranden Tollefsen” தெரிவித்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச்சபை மீதான இந்திய தரப்பின் நடவடிக்கைகளை கண்டித்திருக்கும் “சர்வதேச மனிதவுரிமைகள் ஆணையகம்”, இந்தியாவை தற்போது ஆளும் இந்து தேசியவாத கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் மனிதவுரிமை மீறல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

“சர்வதேச மனிதவுரிமைகள் ஆணையகம்” சார்பாக கருத்து தெரிவித்த “Kenneth Roth”, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் கருத்து சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் மீறப்படுவதற்கு, சர்வதேச மன்னிப்புச்சபையின் வெளியேற்றம் சான்றாக அமைவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

மூல இணைப்பு:

https://www.nrk.no/urix/amnesty-international-forlater-india-_-anklager-myndighetene-for-heksejakt-1.15180219

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments