மனித உடலுக்கு வெளியே 17 நாட்கள் உயிர்வாழும் “கொரோனா” வைரஸ்! புதிய ஆய்வில் தகவல்!!

You are currently viewing மனித உடலுக்கு வெளியே 17 நாட்கள் உயிர்வாழும் “கொரோனா” வைரஸ்! புதிய ஆய்வில் தகவல்!!

“கொரோனா” வைரஸ், மனித உடலுக்கு வெளியே மேற்பரப்புக்களில் 17 நாட்கள்வரை உயிருடன் இருக்கக்கூடியது என புதிய ஆய்வுத்தகவல் தெரிவிக்கிறது.

“கொரோனா” பரவலால் பாதிக்கப்பட்ட அதிசொகுசு பயணிகள் கப்பல்களான “Grand Princess” மற்றும் “Diamond Princess” ஆகிய இரு கப்பல்களிலும் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆராய்ந்த அமெரிக்க ஆய்வு நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

மேற்குறித்த கப்பல்களிலிருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட பின்பு, 17 நாட்கள் கழிந்த நிலையிலும், கப்பல்களின் பயணிகள் அறைகளின் சுவர்களில் “கொரோனா” வைரசுக்கள் உயிர்ப்புடன் இருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள