மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் நியாயமற்றது!

You are currently viewing மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் நியாயமற்றது!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நியாயமற்ற தீர்மானம் தொடர்பில் இலங்கை வாக்கெடுப்பை கோரும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் நியாயமற்றது பொருளாதார நெருக்கடியின் போது நாட்டின் கௌரவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் ஒன்று என்பதால் இலங்கை தனது நண்பர்களுடன் இணைந்து தீர்மானம் குறித்து வாக்கெடுப்பை கோரும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான தீர்மானம் நியாயமற்றது என வெளிவிவகார அமைச்சா எக்கனமி நெக்ஸ்ட் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

இது எங்கள் அரசமைப்பிற்கு எதிரானது நாங்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும் நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் நாங்கள் வெற்றிபெறுகின்றோமோ அல்லது தோல்விஅடைகின்றோமோ என்பது முக்கியமில்லை நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாத விடயங்கள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் எங்கள் நண்பர்களை தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வோம் என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாங்கள் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை குறித்தும் இலங்கைக்கு வெளியே பாதுகாப்பு படையினரின் நீண்ட கால பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை தீர்மானத்தில் பொருளாதார குற்றங்கள் என்ற சில விடயங்களை குறிப்பிட்டுள்ளனர் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன மனித உரிமை பேரவை பொருளாதார நெருக்கடி குறித்து என்ன செய்கின்றது என வெளிவிவகார அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments