மனிவண்ணன் கைது – கனடா – ரொரண்டோ நகர மேயர் ஜோன் டோரி கண்டனம்!

மனிவண்ணன் கைது – கனடா – ரொரண்டோ நகர மேயர் ஜோன் டோரி கண்டனம்!

இலங்கை அரசின் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவு காவல்த்துறையால் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமையை கனடா – ரொரண்டோ நகர மேயர் ஜோன் டோரி கண்டித்துள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரியுடன் இணைந்து யாழ்.மாநகர சபை மேயர் கைது செய்யப்பட்டமைக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவா் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழர்களுக்கு எதிராக தொடரும் இவ்வாறான அநியாயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதற்கு அனைவரும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும். தமிழ் சமூகத்துக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ரொரண்டோ மேயர் ஜோன் டோரி தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments