வவுனியா – சமயபுரம் பகுதியில் தனது மனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று (07.03.2025) மாலை 7.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேற்று இரவு சென்ற உயிரிழந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்திகாயப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டினை தீயிட்டு கொழுத்தியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.