மன்னாரில் குண்டு வெடித்து சிறுவர் இருவர் காயம்!

மன்னாரில்  குண்டு வெடித்து சிறுவர் இருவர் காயம்!

மன்னாரில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரணைஇலுப்பைக்குளம் பகுதியிலேயே இல் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இவ் வெடிப்பு சம்பவத்தினால் படுகாயமடைந்த இரு சிறுவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 12 வயது மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்களே படுகாயமடைந்துள்ளனர்.

இவ்வெடிப்புச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது… மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரணைஇலுப்பைக்குளம் மண்கிண்டியில் வீட்டிற்கு அருகாமையிலுள்ள காட்டுப் பகுதிக்கு குறித்த சிறுவர்கள் இருவரும் தனது அம்மம்மாவுடன் விறகு வெட்டுவதற்காகச் சென்றுள்ளனர்.

அவர்களின் அம்மம்மா விறகு வெட்டிக்கொண்டிருந்த போது மரத்தடியின் கீழ் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அங்கு மண்ணுக்குள் புதையுண்டிருந்த கைக்குண்டின் மீது இரும்பாலான பொருளைக் கொண்டு அடித்துள்ளனர். இதன்போது அக் கைக்குண்டு வெடித்துள்ளது. இதனால் படுகாயமடைந்த இரு சிறுவர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை மடு பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments