மன்னாரில் சிறப்பாக நடைபெற்றது மாட்டுவண்டி சவாரி!

மன்னாரில் சிறப்பாக நடைபெற்றது மாட்டுவண்டி சவாரி!

மன்னார் – கள்ளியடியை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் சண்முகம் அமுர்தலிங்கத்தின் 2ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு வடக்கின் பாரம்பரிய நிகழ்வான இரட்டை மாட்டு வண்டிச் சவாரி போட்டி நேற்று மாலை நடைபெற்றது.

மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற குறித்த இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டியில் 51 ஜோடி காளைகள் பங்குபற்றின. இந்தப் போட்டி A,B,C,D என நான்கு பிரிவுகளாக இடம்பெற்றது.

குறித்த 4 பிரிவுகளிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த போட்டியாளர்களின் காளைகள் வெற்றி பெற்றுள்ளன. போட்டியில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினரால் பரிசில்கள் வழங்கப்பட்டன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments