மன்னார் தீவில் கனியவள மண் அகழ்வு எதிராக மக்கள் போராட்டம்!

மன்னார் தீவில் கனியவள மண் அகழ்வு எதிராக மக்கள் போராட்டம்!

மன்னார் தீவில் கனியவள மண் அகழ்வுக்கான முன்னெடுப்புக்களை தடுத்து நிறுத்தக்கோரி நேற்று (28.12.2020) மன்னார் நகரின் பிரதான பேரூந்து நிலையத்துக்கு முன்னால் மன்னார் பிரஜைகள் குழு, உள்ளுர் கட்டமைப்புக்கள் மன்னாரின் சுற்றுச் சூழலை பாதுகாப்போம் அமைப்பு சமய மற்றும் சமூக நிறுவனங்களுடன் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியது. இதைத் தொடர்ந்து அரசாங்க அதிபருக்கான மகஜர் மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

மன்னார் பிரதேச செயலாளர், பொலிஸ் அதிகாரிகளுக்கும் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் உப தலைவர் சட்டத்தரணி எம்.எம்.சபூர்தீன் ஆகியோரின் தலைமைகளில் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

இதுவிடயமாக கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது.

பகிர்ந்துகொள்ள