மன்னார் பேசாலை காட்டுப்பகுதியில் சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதி மீட்பு!

You are currently viewing மன்னார் பேசாலை காட்டுப்பகுதியில் சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதி மீட்பு!

மன்னார் பேசாலை காவல்த்துறை பிரிவில் உள்ள மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரம் யூட் வீதி காட்டு பகுதியில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை காவல்த்துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளனர்.

-மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் 14கிலோ 175 கிராம் என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கஞ்சா பொதிகள் சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என தெரிய வந்துள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்க வின் பணிப்பில், உதவி காவல் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி மற்றும் பேசாலை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சோமயித், உப காவல்த்துறை பரிசோதகர் விவேகாணந் தலைமையிலான குழுவினர் மேற்படி கேரள கஞ்சாவினை கைப்பற்றி உள்ளனர்.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments