மன்னார் மாவட்டத்தில் தொடரும் அச்சுறுத்தல்: எட்டு நாட்களில் 130 பேருக்கு கொரோனாத் தொற்று!

You are currently viewing மன்னார் மாவட்டத்தில் தொடரும் அச்சுறுத்தல்: எட்டு நாட்களில் 130 பேருக்கு கொரோனாத் தொற்று!

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (7) மேலும் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 130 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் இன்று (8) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (7) மேலும் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த மாதம் 8 நாட்களில் 130 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இந்த வருடம் 1154 கொரோனா தொற்றாளர்களும், மாவட்டத்தில் மொத்தமாக 1171 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இது வரை 10 கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 13 கொரோனா தொற்றாளர்கள் பேசாலை, தலைமன்னார், மூர்வீதி, சாவக்காடு, சாந்திபுரம், எழுத்தூர், நானாட்டான், முருங்கன் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments