“மம்மி” வயிற்றிலிருந்து சுவையான வெதுப்பி…!

You are currently viewing “மம்மி” வயிற்றிலிருந்து சுவையான வெதுப்பி…!
5,300 ஆண்டுகள் பழமையான, “ஓட்சி (Ötzi the Iceman)” என்றழைக்கப்படும் பனிமனிதனின் பதப்படுத்தப்பட்ட உடலின் வயிற்றில் அவதானிக்கப்பட்டு “பூஞ்சை / ஈஸ்ட் / Yeast” நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் “புளிப்புமாவு வெதுப்பி / Sourdough Bread” தயாரித்துள்ளதாக, “Microbiome” என்னும் அறிவியல் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு இத்தாலிய “ஆல்ப்ஸ்” மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஓட்சியின் மம்மி, -6°C வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆய்வின்போது, அவரது உடல் மற்றும் குடலில் குளிரைத் தாங்கக்கூடிய நான்கு வகை ஈஸ்ட் பூஞ்சைகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இவை, அவர் இறந்ததற்குப் பிறகு விரைவில் உடலுக்குள் நுழைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
2DNA” ஆய்வுகளின் மூலம் அந்த பூஞ்சைகளை மீண்டும் வளர்த்த விஞ்ஞானிகள், மூன்று மாத சோதனைகளுக்குப் பிறகு தரமான புளிப்புமாவை உருவாக்கி வெதுப்பி தயாரித்தனர். இந்த வெதுப்பி மிகவும் நன்றாக இருந்ததாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பழமையான பூஞ்சையை பயன்படுத்தி எதிர்காலத்தில் “பியர் / Beer” தயாரிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்த பூஞ்சைகள் சில வேதிப்பொருட்களை உடைக்கும் திறன் கொண்டிருக்கலாம் என்பதால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் ஆய்வுகளிலும் பயன்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

06.06.2026

பகிர்ந்துகொள்ள

Leave a Reply