கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னமும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்க கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அதன்படி, 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான 1810ஆம் இலக்க வர்த்தமானி முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும், தொடர்ச்சியாக நிலம் மீட்பதற்காக அறவழியில் போராடி வரும் ஜே/248, ஜே/251, ஜே/255 மற்றும் ஜே/246 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களின் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் மயிலிட்டி மக்களால் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப்போராட்டத்திற்கு மக்களோடு மக்களாக களத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனது தார்மீக ஆதரவை செயல்ப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






