மரம் வெட்டியவர் மரத்தில் இருந்து வீழ்ந்து படுகாயம்!

மரம் வெட்டியவர் மரத்தில் இருந்து வீழ்ந்து படுகாயம்!

விசுவமடு பாரதிபுரம் பகுதியில் முன்பள்ளி அமைந்துள்ள வாளாகத்திற்கு அருகில் பாரிய மரம் ஒன்று உள்ளது தற்போது வீசிவரும் கடும் காற்றினால் மரம் முறிந்து வீழும் அபாய நிலைகாணப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த மரத்தின் கிழைகளை வெட்டி வீழ்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது.மரம் வெட்ட ஏறியவர் மரத்தினை வெட்டி வீழ்த்தும் போது தவறுதலாக வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.


இதன்போது மாணிக்கபுரத்தினை சேர்ந்த பெனடிட் சேவியர் என்பவர் படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள மூங்கிலாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள குறித்த முன்பள்ளியில் அபிவிருத்தி பணிகளை செய்யமுடியாத நிலை காணப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள். 
நிலப்பிரச்சனை,கட்டங்கள் அமைந்தல் மற்றும் முன்பள்ளி பாதுகாப்பு தொடர்பில் எந்த நடவடிக்கையினையும் முன்னெடுக்க முடியாதுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்கள்

பகிர்ந்துகொள்ள