மருதனார்மடம் சந்தை கொத்தணி மேலும் 3 பேருக்கு கொரோனா!

மருதனார்மடம் சந்தை கொத்தணி மேலும் 3 பேருக்கு கொரோனா!

மருதனார்மடம் கொரேனா கொத்தணியில் மேலும் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவைக்கையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று (21) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் இவர்களுக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒருவருக்கும், கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட இணுவிலைச் சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தமாக மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93ஆக உயர்வடைந்துள்ளது

பகிர்ந்துகொள்ள