மருதனார்மடம் பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் 26 பேர் கைது!

மருதனார்மடம் பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் 26 பேர் கைது!

யாழ்.மருதனார்மடம் பகுதியில் வாள்வெட்டு குழு உறுப்பினர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கூடிய 26 வாள்வெட்டு குழு ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் வாள் வெட்டு குழுவின் தலைவர் ஒருவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கேக் வெட்டுவதற்கு இளைஞர்கள் ஒன்று கூடியுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் மருதனார்மடம் பகுதியில் வைத்து 26 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 8 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments