மருத்துவ மனைக்குள் புகுந்த வெள்ளம்!

You are currently viewing மருத்துவ மனைக்குள் புகுந்த வெள்ளம்!

வங்களா விரிகுடாவில் உருவாகிய ‘புரேவி’ புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதுடன், வைத்தியசாலையின் மதிலும் உடைந்து விழுந்துள்ளது.

அத்துடன் நெடுங்கேணியில் உள்ள கிராமிய கூட்டுறவு வங்கிக்குள்ளும் மழை நீர் சென்றுள்ளமையால் உத்தியோகத்தர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியினை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக மாவட்டத்தின் பல்வேறு தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன், விவசாய காணிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

ஏனைய பாதிப்புக்கள் தொடர்பாக பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள