மற்றொரு தீர்மானத்தை கொண்டு வர பிரித்தானியா திட்டம்!

You are currently viewing மற்றொரு தீர்மானத்தை கொண்டு வர பிரித்தானியா திட்டம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் மற்றுமொரு தீர்மானத்தை கொண்டு வருவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தீர்மானமானது இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கான பொறுப்புக்கூறலின் தாமத நிலை மற்றும் அண்மைய கால உரிமைகள் மீறல்கள் உள்ளடக்கியதாக இருக்கும் என கொழும்பு இராஜதந்திர மட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பிரித்தானியா கொண்டு வரவுள்ள இந்த புதிய தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவும் மேற்குலக நாடுகள் சிலவும் ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் ஜெனிவாவில் ஏற்பட கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றது.இதனடிப்படையில் ஜெனிவா அமர்விற்கு முன்னர் முக்கிய சில ஐரோப்பிய நாடுகளுடன் கலந்துரையாடுடலை முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தீர்மானித்துள்ளார். இந்த கலந்துரையாடல்களுக்கு சில நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

அண்மைய இந்திய விஜயத்தினை போன்று குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெனிவா அமர்வுக்கு முன்னர் விஜயம் செய்தல் அல்லது மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கை குறித்த அறிக்கை சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளல் போன்ற வழிமுறைகள் குறித்து இலங்கையின் இராஜதந்திர பணிகுழாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதே போன்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனிவா செல்லவுள்ளார்.

மார்ச் 3 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த எழுத்து மூலமான அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கையானது இலங்கைக்கு சவால் மிக்கதாகவே அமையும் என கருதப்படுகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments