மலேசியாவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு இளைஞன்!

மலேசியாவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு இளைஞன்!

அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரத்தில் அகதியாக பதிவு செய்து மலோசியாவில் தற்காலிகமாக வாழ்ந்துவந்த இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் மலேசியாவைச் சேர்ந்த இருவரால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மலேசியாவில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை விவேகானந்தன் (வயது 37) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மலேசிய வாழ் இலக்கைத் தமிழ் அகதிகள் அமைப்பு (STROM) அறிவித்துள்ளது.

கடந்த 03ஆம் திகதி அதிகாலை இருவரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பியிருந்ததாகவும் கடந்த 06ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் மலேசியாவில் ஜோகூர் மாசை எனும் இடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றியவர் என்றும் தெரியவருகிறது. அகதி அந்தஸ்து கோரி அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்த்தானிகத்தில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக அவர் தன்னுடைய பெயரை பதிவு செய்து காத்திருந்தவர் என்று மலேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments