மலேசியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு!

You are currently viewing மலேசியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு!

தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கடந்த வாரம் முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் அந்நாடு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரை பருமழை பெய்யும் காலம் என்றாலும் இந்த ஆண்டு மலேசியாவில் வரலாறு காணாத பெய் மழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டும் கனமழையால் 8 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெனிசுலா மலேசியா மாகாணத்தின் பஹங், சிலங்கர் ஆகிய 2 நகரங்கள் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் இருந்த 26 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மலேசியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 26 ஆண்கள், 13 பெண்கள், 2 குழந்தைகள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments