மஹர சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
மேலும் மஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பான கரிசரனையை வெளிப்படுத்தி தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் பதிவொன்றை செய்துள்ளார்.
உரிய விசாரணைகள் ஊடாக இந்தச் சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.
அத்துடன், இலங்கையில் நெல்சன் மண்டலோ சட்டத்தை அமுலாக்குவதற்கு அவசியான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
பகிர்ந்துகொள்ள