மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முற்றாக இடை நிறுத்தம்!

You are currently viewing மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முற்றாக இடை நிறுத்தம்!

இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனாத் தொற்று மற்றும் மரணங்களை அடுத்து பயணக் கட்டுப்பாடுகள் இறுக்கமாக நடைமுறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக் கிழமை நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் இனப்படுகொலையாளி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயற்குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி அட்டையின்றி, பொது இடங்களுக்கு பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments