மாங்குளத்தில் குடும்பஸ்தர் வெடி வைத்து தற்கொலை!

மாங்குளத்தில் குடும்பஸ்தர் வெடி வைத்து தற்கொலை!

இடியன் துவக்கால் தனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று மாங்குளம் 12.08.2020 அன்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாங்குளம் துணுக்காய் வீதியை சேர்ந்த 37 வயதான ரகுநாதன் கௌரிதரன் என்ற குடும்பஸ்தர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் கால் முறிந்து முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 11.08.2020 அன்று வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியவர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் இடியன் எனப்படும் ஒருவகை கட்டு துப்பாக்கியினால் தனக்குத்தானே வெடி வைத்து உயிரிழந்துள்ளார்
மரணம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணையில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் விரக்தியுற்ற குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. குறித்த இளைஞனின்
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவரது உடலம் பெருமளவான மக்களின் இறுதி வணக்கத்துடன் 13.08.2020 அன்று மாங்குளம் பொது சுடலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments