மாங்குளத்தில் குண்டு வெடிப்பு தீவிர விசாரணையில் பொலீசார்!

மாங்குளத்தில் குண்டு வெடிப்பு தீவிர விசாரணையில் பொலீசார்!

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று(26.11.2020) காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பகுதியில் பொலீசார் மற்றும் படையினர் குவிப்பு.மாங்குளம் கற்குவாரிப்பகுதியில் காலை வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இது பிரதேசத்தில் உள்ள அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்னிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த பொலீசார்,மற்றும் படையினர் வெடிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணையினை முன்னெடுத்துள்ளார்கள்.
கற்குவாரிப்பகுதியில் உள்ளா காட்டுப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்களிடம் பொலீசார் விசாரணையினை மேற்கொண்டுள்ளார்கள்.முதற்கட்ட விசாரணையின் போது கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த கைக்குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தடையவியல் பொலீசார்கள் வரவைளக்கப்பட்டு தீவிர விசாரணையினை முன்னெடுத்துள்ளார்கள்.குண்டு வெடிக்கவைத்த காலப்பகுதி பொலீசாரையும் படையினரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில ;படையினர் பொலீசார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள