மாங்குளம் பகுதியில் யானை தாக்கி பருத்தித்துறை குடும்பஸ்தர் பலி!

மாங்குளம் பகுதியில் யானை தாக்கி பருத்தித்துறை குடும்பஸ்தர் பலி!

முல்லைத்தீவு மாங்குளம் மல்லாவி வீதியில் 1 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று(03.11.2020) இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி 37 அகவையுடைய புனிதநகர் சந்தி கற்கோவளம் பருத்துறையினை சேர்ந்த ஆனந்தராசா விஜயானந்தம் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
கூலித்தொழில் செய்துவரும் இவர் தொழில் முடிந்து மாங்குளம் மல்லாவி வீதி 1 ஆம் கட்டை பகுதியில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தவேளை யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்
இதன் போது உயிரிழந்த இவரின் உடலம் மாங்குளம் பொலீசாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments