மாங்குளம் பொலிஸ் பிரிவில் நினைவேந்தலுக்கு தடை!

You are currently viewing மாங்குளம் பொலிஸ் பிரிவில் நினைவேந்தலுக்கு தடை!

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தியாக தீபம் திலீபனை நினைவு கூர முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த தடை உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாங்குளம் காவல்த்துறை பிரிவுக்குள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த இராசையா பார்த்தீபன் அல்லது திலீபன் என்பவர் தொடர்பில் நினைவு கூரல் நிகழ்வை நடாத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக மாங்குளம் பொலிசார் அறிக்கை செய்துள்ளனர்.

எனவே, பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நீங்களும், உங்கள் ஆதரவாளர்களும் மாங்குளம் காவல்த்துறை பிரிவுக்குளம் 24.09.2021 தொடக்கம் 28.09.2021 வரையான காலப்பகுதிக்குள் மேற்படி இராசையா பார்த்தீபன் அல்லது திலீபன் தெர்ர்பிலான எந்தவொரு நினைவுகூரலையும் மேற்கொள்ளக்கூடாதென்ற தடைக்கட்டளையை குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் பிரிவு 106 இற்கு அமைவாக பிறப்பிக்கின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடைக் கட்டளையில், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், மற்றும் திலகநாதன் சிந்துயன், ரகுநாதன் துஸ்யந்தன், புன்சிதபாதம் ரவீந்திரன் (ரவி மாஸ்டர்), ராசமணி சிவராசா, மகாதேவன் ரூப்பானந் ஆகிய 7 பேரினது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments