மாங்குளம் மணவாளன் பட்டமுறிப்பில் மாட்டுடன் மோதிய படையினன் பலி!

You are currently viewing மாங்குளம் மணவாளன் பட்டமுறிப்பில் மாட்டுடன் மோதிய படையினன் பலி!

முல்லைத்தீவு மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் மணவாளன் பட்டமுறிப்ப பகுதியில் உந்துருளியில் பயணித்த படையினன் ஒருவர் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் பகுதியில் நிலைகொண்டுள்ள 57 ஆவது படைப்பிரிவினை சேர்ந்த படையினன் நேற்று(21.11.2020) இரவு உந்துருளியில் மாங்குளத்தில் இருந்து ஒட்டுசுட்டான் வீதியில் பயணித்த வேளை மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளான்.
இவரது உடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள