மாணவி தூக்கிட்டு தற்கொலை! தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட தாய்!

மாணவி தூக்கிட்டு தற்கொலை! தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட தாய்!

காதலனால் ஏமாற்றப்பட்ட மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை கொக்குவில் அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மகேஸ்வரன் கஜானி (17) என்று சிறிலங்கா காவல் துறையினர்  தெரிவித்தனர்.

மிகவும் வறுமைப்பட்ட இந்த குடும்பம் கடந்த கால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட நிலையில் வன்னிப் பிரதேசத்தில் இருந்து கொக்குவில் பகுதியில் வந்து மீளக்குடியமர்ந்ததாக காவல் துறையினர்  தெரிவித்தனர்.

குறித்த மாணவி நெடுந்தீவு பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபன் ஒருவனை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். நேற்றுக்காலை தாயார் வெளியில் சென்றுள்ள நிலையில் அம்மம்மாவுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

காதலனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவர், நீண்ட நேரமாக அழுது கொண்டு இருந்துள்ளார்.தொலைபேசி கதைத்துக் கொண்டு சென்ற பேரப் பிள்ளையை காணாத அம்மம்மா, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது குளியலறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் துறைக்கு  தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த திடீர் மரண விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்த வேளை, மன விரக்தியில் மிகவும் சோகமாக காணப்பட்ட தாயார் தனது மகள் உயிரிழந்த சோகத்தை தாங்கமுடியாமல் அறையினை பூட்டி விட்டு அவரும் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

தாய் தீயில் எரிவதை கண்ட யாழ்ப்பாணம் காவல் துறையினர் , அறையின் கதவினை உடைத்து தீயினை கட்டுப்படுத்தியதுடன், உடல் முழுவதும் பலத்த எரி காயங்களுக்கு உள்ளான தாயையும் மீட்டு அம்புயூலன்ஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதித்தனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மகளும் அதே வண்டியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றமை கொக்குவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாணவி கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்பவராவார். காதலனால் ஏமாற்றப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர்  ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!