மாதகலில் 104 கிலோ கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது!

மாதகலில் 104 கிலோ கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது!

மாதகல் பகுதியில், கடற்படையினரால், 104 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கடல்வழியாக கொண்டு வரப்பட்ட 57 கிலோ எடையுள்ள கேரளா கஞ்சா பொதிகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

இதையடுத்து, இவற்றைக் கடத்தி வந்தவர்களை கண்டுபிடிக்க கடற்படையினர் விசேட தேடுதலை மேற்கொண்டனர். இதன்போது, மாதகல் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, மேலும் 13 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46 கிலோ கேரளா கஞ்சா பொதிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த தேடுதல்களின் போது, மொத்தமாக 104 கிலோ கேரளா கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments