மாமனிதர் ரவிராஜ் நினைவுப் பூஞ்சாடிகளை சேதப் படுத்திய மர்மமனிதர்!

மாமனிதர் ரவிராஜ் நினைவுப் பூஞ்சாடிகளை சேதப் படுத்திய மர்மமனிதர்!

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது அமரர் ரவிராஜின் உருவச்சிலையை மூடி சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் நேற்றைய தினம் கட்டப்பட்டிருந்த கறுப்பு, சிவப்பு துணிகளும் அகற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments