மாமியாரை கொன்ற மருமகன் மனைவியும் படுகாயம்!

You are currently viewing மாமியாரை கொன்ற மருமகன் மனைவியும் படுகாயம்!

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு உள்ளாகி மாமியார் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், மனைவிபடுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம்,நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அது முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கோடரி மற்றும் கத்தியை கொண்டு கணவன் மனைவி மீது தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதனை தடுக்க சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவியின் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மனைவி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பெரிய உலுக்குளம் பகுதியை சேர்ந்த டிபி அமராவதி (வயது 60), என்ற பெண் பலியானார், அவரது மகளான துலிகா ரத்தினசிறி (வயது 37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை முன்னெடுத்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஸ்தலத்துக்கு விரைந்த உலுக்குளம் சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments