மாறி மாறி வெட்டிக் கொள்ளும் பிள்ளையான்+வியாழேந்திரன் குழுக்கள்!

You are currently viewing மாறி மாறி வெட்டிக் கொள்ளும் பிள்ளையான்+வியாழேந்திரன் குழுக்கள்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திகிலிவெட்டை சந்திவெளி பிரதேசத்தை சேர்ந்த பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்ட பிள்ளையான் குழு உறுப்பினர் ஒருவரை வியாழேந்திரன் குழு கத்தி வாள்களை கொண்டு சரமாரியாக வெட்டி குறித்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் பிள்ளையான் குழுவினர் வியாழேந்திரன் குழுவின் இருவருக்கு சராமாரியாக கத்தி வாள் கூரிய ஆயுதங்களால் தாக்கி உயிருக்கு போராடும் நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் கொலை கொள்ளை.கடத்தல்களில் ஈடுபட்ட பிள்ளையான் அணியினர். மீண்டும் கோத்தபாயாவின் வருகையின் பின்னர் இவ்வாறான சம்பவங்ள் ஈடுபடுவது சாதாரணமாகிவிட்டது

அதை விட ஒருபடி மேல் சென்று வியாழேந்திரன் குழு பதவி ஆசையில் கொலை வெறி பிடித்து ஆடுகின்றது. இந்த நிலமையில் மக்கள் மிகவும் பயங்கரமாகவும் அச்ச சூழலிலும் காணப்படுகின்றனர்.

.
அண்மையில் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளரில் ஒருவருக்கு கடத்தல் சம்பவம் தொடர்பாக ஒருவருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.இதே போல் கொலை குற்றசாட்டில் பிள்ளையான் உட்பட பல உறுப்பினர்கள் சிறையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த லட்சணத்தில் அரசியல் ஒரு கேடா என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

மாறி மாறி வெட்டிக் கொள்ளும் பிள்ளையான்+வியாழேந்திரன் குழுக்கள்! 1
மாறி மாறி வெட்டிக் கொள்ளும் பிள்ளையான்+வியாழேந்திரன் குழுக்கள்! 2
பகிர்ந்துகொள்ள