மால தீ🔥

மால தீ🔥

மாலதி
பெண்விடுதலையின்
மகுடம்!
மண்விடுதலையின்
முதல் வித்து!

தீராத தாகத்தின்
போர் மேகம்!
வரலாற்றில்
வல்லரசின் திமிர்
அடக்கிய
ஈழத்தின் மறத்தி!

அடங்கிக்கிடந்த
பெண்ணினத்தின்
மடையுடைத்து
சீறியெழுந்த
அலைகடல்!
ஆக்கிரப்பாளர்களின்
அகோரக்கரங்களை
முறித்துப்போட்ட
அரியாத்தையின்
பேத்தி!

அறத்தின் அற்பணிப்பை
காந்திதேசத்திற்கு
கற்பித்த
ஆசான்!
அன்னைபூபதித்தாயின்
வழித்தோன்றல்!
தானைத்தலைவன் வழி நின்று
சேனையை வழிநடத்திய
விதுசா துர்காக்களின்
விம்பம்!

யாருக்கும் வளைந்து போகாது
தமிழினத்தை விற்றுப்பிழைக்காது
நேருக்கு நேர் நின்று
கூன் தகர்த்தவள்!

வேருக்கு நீர் பாய்ச்சி
வேலுப்பிள்ளை மகனின்
விடுதலைவேள்விக்கு
சுடுகலன் சுமந்தவள்!

ஒற்றுமையை சிதைக்கும்
ஒற்றர்களை ஓரம்கட்டி
நற்றமிழ் செழித்திடும்
உற்ற தோழியாய்
விற்றுப்பிழைக்காத
செஞ்சோற்றுக்கடன்
செய்து முடித்தவள்!

தன்னுயிர் போனாலும்
மண் மானம் காக்கும்
ஆயுதம் எதிரியிடம்
வீழக்கூடாது என்பதில்
மனோதிடம் கொண்டவள்!

மாலதியெனும் தீ
ஈழமங்கையின் நெஞ்சில்
ஆழமாக சுடவேண்டும்
அப்போதுதான்
ஆத்மாத்தமாக விடுதலையின்
சுவாச எல்லையை
தொடமுடியும்.
அவளின்
ஆழமான சிந்தனையிலிருந்து
ஒரு துளியாவது
உள்ளத்தை தூய்மைப்ர
படுத்தி
மண்விடுதலையை
செப்பனிடும்.

✍ தூயவன்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments