மாவீரர்நாள் தடை உத்தரவோடு தலைதெறிக்க ஓடும் சிறீலங்கா காவல்த்துறை!

You are currently viewing மாவீரர்நாள் தடை உத்தரவோடு தலைதெறிக்க ஓடும் சிறீலங்கா காவல்த்துறை!

இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு, முல்லைத்தீவு காவல் பிரிவில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பன்னிரெண்டு பேருக்கு முல்லைத்தீவு நீதவான்    நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய 06 காவல் நிலையங்களினாலும் பல்வேறு நபர்களுக்கு எதிராக இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு   காவல் பிரிவு  பகுதிக்குள்  மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி, முல்லைத்தீவு சிறீலங்கா காவல்த்துறை (17.11.2021இன்று மாங்குளம்  நீதிமன்றில் 

A/R 868/21 என்னும் வழக்கிலக்கத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். 

அதற்மைய வழக்கினை ஆராய்ந்த   முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற  நீதிபதி ரி.சரவணராஜா, முல்லைத்தீவு பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட பகுதியில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட  பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். 

அந்தவகையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழரசு கட்சியைச் சேர்ந்த அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இழஞ்செழியன்,சமூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா(கரன்), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் ,நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன்(முல்லை ஈசன்),சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி ,சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சமூக செயற்பாட்டாளர்  கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் ஆகிய பன்னிரெண்டு பேர் மற்றும் இவர்களது  குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவீரர்நாள் தடை உத்தரவோடு தலைதெறிக்க ஓடும் சிறீலங்கா காவல்த்துறை! 1
மாவீரர்நாள் தடை உத்தரவோடு தலைதெறிக்க ஓடும் சிறீலங்கா காவல்த்துறை! 2
மாவீரர்நாள் தடை உத்தரவோடு தலைதெறிக்க ஓடும் சிறீலங்கா காவல்த்துறை! 3
மாவீரர்நாள் தடை உத்தரவோடு தலைதெறிக்க ஓடும் சிறீலங்கா காவல்த்துறை! 4
மாவீரர்நாள் தடை உத்தரவோடு தலைதெறிக்க ஓடும் சிறீலங்கா காவல்த்துறை! 5
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments