மாவீர் தின ஏற்பாடு முல்லைத்தீவு மாவட்டத்தில் பலரிடம் பொலீஸ் விசாரணை!

You are currently viewing மாவீர் தின ஏற்பாடு முல்லைத்தீவு மாவட்டத்தில் பலரிடம் பொலீஸ் விசாரணை!


முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தினை ஏற்பாடு செய்பவர்கள் என்ற சந்தேகத்தில் பலரிடம் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
தேவிபுரம் பகுதியில் மாவீரர்களுக்கு விளக்கேற்றுவது தொடர்பில் இருவரிடமும், இரணைப்பாலையில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் செய்வது தொடர்பில் ஒருவரையும் புதுக்குடியிருப்பு பொலீசார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இதேவேளை முல்லைத்தீவில் மாவீர் தின ஏற்பாடுகளை மேற்கொள்பவர்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
போரில் உயிரிழந்தவர்களை நினiவிற்கொள்வதனை அடக்கும் செயற்பாடாக மறைமுகமாக அச்சுறுத்தும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள