மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறப்பு!

மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறப்பு!

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நோர்வே தூதுவர் டிரைன் ஜெரான்லி எஸ்கெடாலினால் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடத்தின் அனுசரணையில் இந்த மின் நிலையம் 30 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 42 கிலோ வோற் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் பயன்பாட்டு அறிவியலுக்கான மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியன கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் ஆதரவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளின் விளைவாக இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் மேற்கு நோர்வே பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளன் வேலாயுதபிள்ளை, யாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் திரு.க.கந்தசாமி, யாழ். பொறியியல்பீட பீடாதிபதி அற்புதராஜா, தூதரக அதிகாரிகள், அனுசரணையாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!