மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் 103 பேருக்கு கொரோனா

மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில்  103 பேருக்கு கொரோனா

ஸ்ரீலங்காவில் தொடச்சியாக அதிகரிக்கும் சமூகதொற்றாக இரண்டாம் கட்ட கொரோனா அலைவீசத்தொடங்கியுள்ளது தெற்கினை தளமாக கொண்டு இயங்கிவரும் ஆடைத்தொழில்சாலையில் வடக்கினை சேர்ந்த 400ற்கும் அதிகமான யுவதிகள் பணியாற்றி வருகின்றார்கள் இன்னிலையில் இதுவரை 103 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,513ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் இதுவரையில் மொத்தமாக 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments