மியன்மாரில் நிலச் சுரங்கத்தில் மண்சரிவு 50 பேர் வரை பலி!

மியன்மாரில் நிலச் சுரங்கத்தில் மண்சரிவு 50 பேர் வரை பலி!

மியான்மரின் வடக்கே உள்ள ஹபகானில் அமைந்துள்ள சுரங்கத்தில் குறைந்தது 50 பேர் இறந்துவிட்டதாகவும் சுமார் 200 பேர் சிக்கியிருப்பதாகவும் சீன அரசு தொலைக்காட்சி சிஜிடி என் முதலில் தெரிவிக்கப்பட்டள்ளது..

மீட்புக்குழுவின் அறிக்கையின்படி சுரங்கத்துக்குள் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த பேரிடர் நிகழ்ந்துள்ளது.

சுரங்க சரிவு உள்ளூர் நேரப்படி காலை 6:30 மணிக்கு நடந்துள்ளது இது நோர்வே நேரப்படி அதிகாலை 2:30 மணிக்கு இடம்பெற்றுள்ளது என தெரியவருகின்றது. மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது என மீட்புப் குழு தெரிவித்துள்ளது..

இரண்டாம் இணைப்பு

மியன்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 113 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவமானது கச்சின் மாநிலத்தின் ஹபகாந் பகுதியிலுள்ள உள்ள ஜேட் சுரங்கத்தில் இன்று ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் 113 இறந்தவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணிகளில் அந்நாட்டு தீயணைப்புப்படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments