மீண்டும் பிரான்சை தாக்கும் கொரோனா

You are currently viewing மீண்டும் பிரான்சை தாக்கும் கொரோனா

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரம், பாரிஸ் புறநகர் இவற்றுடன் 8 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மக்ரோன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

17ம் திகதி சனிக்கிழமை முதல் இந்த ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகின்றது. கொரோனா அலை ஒன்று ஏற்பட்டு இருந்த பொழுது நாடு முழுவதிலும் உள்ளிருப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அலை இரண்டு ஏற்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகின்றது.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மக்ரோன் உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளார். தினமும் இரவு 9 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.

அடுத்துவரும் நான்கு வாரங்களுக்கு இந்த கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாட்டை பிறப்பித்த அதிபர் மக்ரோன் , கொரோனா பற்றிய பல்வேறு விடயங்களை எடுத்துக் கூறினார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எதனையும் இழந்துவிடவில்லை. சூழ்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. ரோனா முதலாவது அலையின் போது கற்றுக்கொண்டோம். அப்பொழுது 30,000 பேர் வரை உயிரிழந்தார்கள். இப்பொழுது இரண்டாவது அலை ஆரம்பித்திருக்கும் போது 2 ஆயிரம் பேர் வரை இருந்திருக்கிறோம்.

தற்பொழுது ஐரோப்பாவையும் கொரோனா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் கொரோனா தொற்றாளர்களால் அதிக இடங்களைப் பிடித்துள்ளன. கொரோனா மார்ச் மாதம் ஆரம்பித்தபோது கொரோந்தெஸ் மாகாணத்தில் தான் தளம் கொண்டு தாக்கம் அதிகமாக இருந்தது.

ஆனால் தற்பொழுது கொரோனா பிரான்ஸ் முழுவதையும் ஆக்கிரமித்து பரவியுள்ளது. அடுத்து வரும் நான்கு வாரங்களுக்கு பரிஸ் – பரிஸ் புறநகர் மற்றும் 8-ம் நகரங்களுக்கு ஒக்டோபர் 17ம் திகதி சனிக்கிழமை முதல் ஊரடங்கு அமுலுக்கு வருகிறது .

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை மூலம் தற்பொழுது நாள்தோறும் 20,000 பேருக்கு ஏற்படும் தொற்று 5000 முதல் 3000 ஆக குறைவடையச் செய்ய வழி பிறக்கும். இப்பொழுது தீவிர சிகிச்சை பிரிவுக்கு 200 பேர் வரை செல்கிறார்கள். நாடு முழுவதையும் முடக்குவதை விட இவ்வகையான ஊரடங்கு நடவடிக்கை பயனுடையதாக அமையும்.

மயன், குவாத்தலூப், குயன் ஆகிய மாவட்டங்களில் இவ்வகையான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதில் வெற்றி கிட்டியது. ஊரடங்கு உத்தரவு 8 மாநகரங்களிலும் பரிஸ் – பரிஸ் புறநகர் உள்ளிட்ட இல் து பிரான்ஸ் மாகாணத்திலும் அமுல்படுத்தப்படுகிறது.

தற்பொழுது நான்கு வாரங்களுக்கு என அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு 6 வாரங்களுக்கு நீடிக்கப்படுவது நல்லதாக அமையும். அதனை நாடாளுமன்றத்தில் தீர்மானித்து நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்படுவோருக்கு உதவிகள் வழங்கப்படும்.ஹோட்டல் பணியாளர்கள்,உணவகப் பணியாளர்கள், கலை நிகழ்ச்சி அமைப்பாளர்கள், கலாச்சார பணியாளர்கள் ஆகியோருக்கு முழுமையான சோமாஸ் வழங்கப்படும்.

எல்லோரும் தொழில் புரிய வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த வேண்டும். இவற்றைத் தொடர வேண்டும். இதுவே வாழ்க்கைத் தரத்தை நிலை நிறுத்தி வைத்திருக்கும். இரவு 9 மணிக்குப் பின்னர் கடமை முடிந்து செல்பவர்களுக்கும் வைத்தியமனைகளுக்குச் செல்பவர்களுக்கும் அனுமதி உண்டு. கட்டுப்பாடுகளை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. எதற்கும் தடையில்லை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இரவு 9 மணிக்குப் பின்னர் களியாட்டங்களில் ஈடுபடல்,உணவகங்கள் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வது என்பவை தடை செய்யப்பட்டுள்ளன.

பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறும் ஒருவருக்கு 135 யூரோ தண்டம் அறவிடப்படும். இரண்டாவது முறை அவர் அதே தவறைப்புரிந்தால் தண்டப்பணமாக ஆயிரத்து ஐநூறு ரூபா அறவிடப்படும். ஊரடங்கு உத்தரவை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கான கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து சேவைகள் ஒழுங்காக நடைபெறும். மாகாணத்திலிருந்து மாகாணத்திற்கு செல்வதில் தடை இல்லை. விடுமுறைக் காலங்களிலும் இந்த நேரம் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து எப்பொழுதும் வெளியே செல்லல் வேண்டும்.

6 பேருக்கு மேல் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளிலும் வெளி இடங்களிலும் ஆறு பேருக்கு மேல் கூட முடியாது. இணையதளம் வழியாக பணியாற்றக்கூடியவர்கள் அவ்வாறு பணி செய்ய வேண்டும். ஸ்ரொப் கோவிட் திட்டம் வெற்றி அளிக்கவில்லை. ஒக்ரோபர் 22ஆம் திகதி தூஸ் அன்ரி கோவிட் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ஆர் எஸ் ஆ 150 யூரோவும், குழந்தைகளுக்கு 100 யூரோவும் வழங்கப்படும். ஒற்றுமையாக இருந்தால் கொரோனாவை வெற்றி கொள்ளலாம்” என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள