மீண்டும் புருடா விடும் மகிந்தா அன் கோ!

You are currently viewing மீண்டும் புருடா விடும் மகிந்தா அன் கோ!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன், பசில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், சித்தாரத்தன், சாந்தி சிறீஸ்கந்தராஜா தவிர்ந்த 12 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, நாடாளுமன்றத்தை மீள கூட்டப்படுவதையே நாம் விரும்புகிறோம் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

இதன்போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை மிக நுணுக்கமான அணுவேண்டியுள்ளதால் படிப்படியாக அதற்கான நகர்வுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்த முடியும் என, பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன், காணி விடுவிப்பு தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏனைய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள