மீண்டும் மீண்டும் முளைக்கும் வாள்வெட்டு குழு!

மீண்டும் மீண்டும் முளைக்கும் வாள்வெட்டு குழு!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்துவரும் பின்னணியில் நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் பிரதேச சபையில் கடமையாற்றும், சுன்னாகம் ரயில் நிலைய வீதியைச் சேர்ந்த தே. நடேசு (வயது – 44) என்பவர் மீதே வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையில் இருந்து கடமை முடிந்து சுன்னா கத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இணுவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு அருகில் வைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான ஊழியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்த்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments