மீண்டும் முல்லைத்தீவில் போராட்டம்!!

மீண்டும் முல்லைத்தீவில் போராட்டம்!!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் வைத்திய பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி சற்று முன்னர் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை முன்பாக ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் தொடர்ச்சியாக தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறையில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு வகையிலும் பின்தங்கி காணப்படும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சீராக இயங்காததால் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படாததன் பின்னணியில் குறித்த போராட்டமானது இன்று முதல் தொடர் போராட்டமாக இடம்பெற உள்ளது.

எனவே சற்று முன்னர் ஆரம்பமான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திலே அரசியல் வாதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் வர்த்தக சங்கத்தினர் தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், சமூக ஆர்வலர்கள் நலன்விரும்பிகள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த போராட்ட இடத்தில் முள்ளியவளை காவல்த்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments