முகக்கவச விதிகள் : முகக்கவசம் அணியாவிட்டால் €10,000 வரை அபராதம்!

முகக்கவச விதிகள் :  முகக்கவசம் அணியாவிட்டால் €10,000 வரை அபராதம்!

ஜெர்மனியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அதிகபட்சமாக €10,000 வரை அபராதம் விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. முகக்கவச வரி சட்டத்தையும் அந்த நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின்படி பொது இடங்களுக்கு வருவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போர் முகக்கவசம் அணிவது கட்டாயமாகியுள்ளது.

Maskenpflicht (mask duty) என்று அழைக்கப்படும் இந்த விதிமுறையானது நாட்டின் 16 மாநிலங்களில் 15 இல் நேற்று திங்கள்கிழமை காலை அறிமுகப்படுத்தப்பட்டது. 16 வது, வடக்கு மாநிலமான Schleswig-Holstein இல் புதன்கிழமை இந்த விதிமுறை அமல்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

முகமூடி அணியத் தவறியவர்களுக்கு € 25 முதல் € 10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும், அபராதங்கள் நாடு முழுவதும் பரவலாக வேறுபடுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பெர்லின் (Berlin ) மற்றும் பிராண்டன்பர்க் (Brandenburg) போன்ற சில மாநிலங்களில் அபராதம் விதிக்கப்படமாட்டாது என்றும், ஆனால் அதற்கு பதிலாக மக்கள் முகக்கவசம் அணிவதன் மூலம் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையை காட்டவேண்டும், பிற மாநிலங்களில் இந்த புதிய விதிமுறைக்கு மக்கள் பழகுவதற்கு சில நாட்கள் கருணை அனுமதி வழங்கப்படும் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி பொது இடங்களுக்கு வருவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போர் முகக்கவசம் அணிவது கட்டாயமாகியுள்ளது. இல்லாதபட்சத்தில் துணி அல்லது கைக்குட்டைகள் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments