முக கவசம் அணிய கூறியதால் துப்பாக்கிச்சூடு!

You are currently viewing முக கவசம் அணிய கூறியதால் துப்பாக்கிச்சூடு!

ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அரசு பொதுசேவை மையம் ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இந்த மையத்துக்கு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் வந்தார். அப்போது அவர் முக கவசம் அணியாமல் இருந்தார்.
இதனால் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்த பொதுசேவை மையத்தின் பாதுகாவலர் முக கவசம் அணியும்படி அவரை கேட்டுக்கொண்டார்.ஆனால் அவர் முக கவசத்தை அணிய மறுத்து பாதுகாவலருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கடும் ஆத்திரமடைந்த முன்னாள் ராணுவ வீரர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார்.
இதில் அந்த பாதுகாவலர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, வெறிச்செயலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரை காவல்த்துறையினர் கைது செய்தனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments